அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கப் பல்கலைக் கழங்கங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் விதிகளுக்கு முரணாக நடந்துகொள்வதாகக் கூறப்படும் நிலையில் பல்கலைக்கழங்கள் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வரை பல்கலைக் கழகங்களுக்கான மானியங்களை நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

வெளிநாட்டு மாணவர்களே அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு முதன்மை வருவாய் ஆதாரமாக உள்ள நிலையில் ஹார்வர்ட் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன.

இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்குமாறு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் விசா அதிகாரிகளுக்கு ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடக கணக்குகள் குறித்த சோதனைகளை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த சமூக ஊடக சோதனைகள் முடிந்ததும் இவர்களுக்கான விசா விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.