ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கா வர தடை விதித்துளள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அறிவுப்பு உலகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “போர், தீவிரவாதம், பாதிப்புகளில் இருந்து தப்பித்து பிழைக்க வருபவர்களை கனடா மக்கள் வரவேற்பார்கள். அப்படி வருபவர்களின் மத நம்பிக்கையை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம். எந்த மதத்தினராக இருந்தாலும் வரவேற்போம்” பன்முகத் தன்மையே நமது வலிமை.#welcomecanada, ” என்று தெரிவித்துள்ளார்.
கனடா மக்கள் தங்கள் பிரதமரின் அறிவிப்பை ஒருமனதாக வரவேற்றுள்ளனர். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், 1லட்சத்து 50 ஆயிரம் பேர் அவரது பதிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர் உருவாக்கிய #welcometocanada என்ற ஹேஸ்டேக் கனடாவில் டிரென்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.