விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்ப்பூருக்கு அரிசி ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று, ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள கஜல்பாடி மலைப்பாதை வழியாகச் சென்றது.
கூகுள் மேப் உதவியுடன் குறுக்குவழியில் செல்ல டிரைவர் நினைத்ததை அடுத்து மேப்-பே துணை என்று லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆனால், மலைப்பாதையில் ஒரு குறுகிய சாலைக்கு கூகுள் மேப் இட்டுச் சென்றதை அடுத்து செய்வதறியாது திகைத்தார்.
இதனைத் தொடர்ந்து பின்னோக்கி வரவும் முடியாமல் மலைப்பாதையில் அதே இடத்தில் மூன்று நாட்களாக அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இதுவரை அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்ற காவல்துறையினர் எந்த ஒரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
இதனால் அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகின்றன.