தராபாத்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெண் எம்பி கவிதாவுக்கு தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததற்காக 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூபா பாத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மலோத்து கவிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அவர் தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கவிதா மீது வழக்கு பதியப்பட்டது.  இந்த வழக்கை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.    விசாரணையில் தேர்தலின் போது கவிதா வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது உறுதி ஆனது.

இதிஅயொட்டி கவிதாவுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் பணம் அளித்ததில் உதவியாக இருந்த அவரது உதவியாளருக்கும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.