இந்தியா – இலங்கை முதல் டி 20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

Must read

கொழும்பு

ந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டி ௨௦ கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

தற்போது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த வரிசையில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசி போட்டியில் 5 புதுமுக வீரர்களைக் களமிறக்கியது. இதனால், இந்தியா பீல்டிங்க் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையொட்டி கடைசி போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று இரவு இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்த போட்டியில், இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது  அதே வேளையில். இந்திய அணியும் தனது முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது

இந்த இரு அணிகளும் இதுவரை டி 20 போட்டியில் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்தியா 13 போட்டியிலும், இலங்கை 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒருபோட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை

More articles

Latest article