தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ கோழைகள் சிலர் முடக்கியுள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு ஆதரவான கருத்து கூறியதாக அவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையே, நேற்று, த்ரிஷா, எய்ஸ்ட் நோய் தாக்கி மரணமடைந்துவிட்டதாக ஒரு போஸ்டர் சமூகவலைதளங்களில் பதியப்பட்டது. இதற்கு த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில்கடும் கண்டனம் தெரிவித்தார்.
“பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள், தமிழ்க்கலா்சாரம் பற்றி பேச வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் “நானும் ஒரு தமிழன் தான். ஆனால் நான் பீட்டாவிற்கு ஆதரவளிக்கிறேன். ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்” என்று ஒரு தகவல் பகிரப்பட்டது.
ஆனால் அந்த தகவல்கள் வெளியாகிய அடுத்த சில நிமிடங்களில் நடிகை த்ரிஷா தான் இந்த தகவலை பகிரவில்லை என்றும் தன் ட்விட்டர் மற்றும் முகநூல் கணக்கை யாரோ ஹேக் செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். “இப்படி முடக்கியவர்கள் கோழைகள்” என்றும் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.