லூசியா, யு டர்ன் போன்ற படங்களை இயக்கிய பவன் குமாரின் புதிய படம் த்விட்வா (Dvitva). இதில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.
புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஹம்பிள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதுவொரு சைக்கலாஜிகல் த்ரில்லர். இந்தப் படத்தில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கு முன் 2014-ல் புனித் ராஜ்குமார் ஜோடியாக பவர் என்ற படத்தில் த்ரிஷா நடித்தார். அது அவரது முதல் கன்னடப்படம். தெலுங்கு தூக்குடு படத்தின் ரீமேக்தான் இந்த பவர். தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் பவரில் த்ரிஷா நடித்திருந்தார்.
7 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு கன்னடப் படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இதிலும் நாயகன் அதே புனித் குமார்.