செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம்.
இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, மலையாள நடிகர் ஜெயராம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அமலா பால் மற்றும்ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் , விக்ரம் , ஜெயராம் இப்படத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளனர் .
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிக்க பிரபல முன்னணி நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்பொழுது இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் மணிரத்னம், இப்படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.