அகர்தலா: திரிபுரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்,  காங்கிரஸ் கட்சி, பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது,

திரிபுரா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைகிறது.  அதைத்தொடர்ந்து, அங்கு 60 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது.  கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 35 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், தற்போதைய தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் பிரவேசத்தால், அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்க கடும் நெருக்கடி  எழுந்துள்ளது.

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், முதல்கட்டமாக  17 தொகுதி வேட்பாளர்களை  காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி, மாநில தலைநகர் அகர்தலா தொகுதியில், சுதிப்ராய்பர்மன் களமிறங்குகிறார்.

அதுபோல, பாஜக தரப்பில் 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,, தற்போதைய  முதல்வர் மாணிக் சாஹா டவுன் போர்டோவாலியிலும், மத்திய அமைச்சர் பிரதிமா பூமிக் தன்பூரிலும், எம்.டி.மொபோஷர் அலியும் கட்சியில் இணைந்த கைலாஷாஹர், மாநில பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி பனமாலிபூரில் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக  கடந்த வாரம் இடது முன்னணி அதன் கூட்டணி கட்சிகளுடன்  பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி நேற்று (புதன்கிழமை) இடது முன்னணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்தது. திரிபுராவில் உள்ள மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 46 இடங்களில் இடது முன்னணி, 13 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான புரோஷோத்தியம் ரே பர்மனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.