2 வேட்பாளர்களை வாபஸ் பெற்று காங்கிரஸுக்கு ஆதரவு தந்த திரிபுரா பழங்குடியின கட்சி

Must read

அகர்தலா:

திரிபுரா பழங்குடியின கட்சி அறிவிக்கப்பட்ட மக்களவை வேட்பாளர்களை திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.


ஐஎன்பிடி கட்சியின் தலைவர் பிஜோய் குமார் ஹ்ரேக்வால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களது முக்கிய கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கலந்து ஆலோசித்தோம். எங்களது கட்சி திரிபுராவில் மிகவும் பழைய கட்சி. நாங்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினோம்.

எங்கள் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கின்றோம். 2 மக்களவை தொகுதிகளுக்கு நிறுத்திய வேட்பாளர்களை திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளோம்” என்றார்.

More articles

Latest article