கர்தலா:

ரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று திரிபுரா உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று இல்லாத மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ள திரிபுராவில், பொருளாதர வீழ்ச்சியை கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுராவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், காகிதத்தை பயன்படுத்துவதை விட்டு விட்டு கடிதங்களை இமெயிலில் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


இதுமட்டுமின்றி பொது நிகழ்ச்சிகள், கண்காட்சி உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்வதாக இருந்தால் முதலமைச்சர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை 10 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்றும், ஏசி பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்த வேண்டியிருந்தால், கண்டிபாக மாநில பொருளாதார வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குரிய சிக்கன நடவடிக்கைகள் அனைத்தும், உடண்டியாக அமலுக்கு வர உள்ளதாகவும், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.