
அகர்தாலா:
திரிபுரா சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒருவர் சபாநாயகரின் செங்கோலை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுரா மாநில சட்டமன்றத்தில் இன்று விவாதம் நடந்து கொண்டிருந்தபோது திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் ராய் பர்மன், உள்ளூர் நாளிதழில் வந்த ஒரு செய்தி குறித்த பிரச்சினையை எழுப்பினார். இதையடுத்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது பர்மன், சபாநாயகரின் மேஜை மீது இருந்த செங்கோலை எடுத்துக் கொண்டு பர்மன், வாயிலை நோக்கி ஓடினார். அவரைத் துரத்திச் சென்ற, காவலர்கள், அவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக செங்கோலை பிடுங்கினர்.
பிறகு இரண்டு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வின் இச்செயலுக்கு, சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel