சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன்.
தனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் உட்பட சில வெப் சீரிஸ்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெப் சீரிஸின் சோக பாடல் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலுக்கு ஜெய் இசையமைத்துள்ளார்.