சென்னை:

மிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்றுடன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட கே.திரிபாதி இன்று டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் டி.கே.ராஜேந்திரன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

முன்னதாக சென்னை கடற்கரை சாலையில்  உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பதவி ஏற்க அலுவலகம் வந்த  ஜே.கே.திரிபாதிக்கு காவல்துறை இசை வாத்திய குழுவினர் இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.  இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில்  சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட பல ஏடிஜிபிக்கள், ஐ.ஜிக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட ஜே.கே. திரிபாதியிடம், டி.கே.ராஜேந்திரன் பொறுப்பு களை ஒப்படைத்து,  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

பதவி ஏற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி திரிபாதி, தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்ததுடன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.

பொறுப்பை ஒப்படைத்து விட்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட டி.கே.ராஜேந்திரனுக்கு காவல் அதிகாரிகள், பிரியாவிடை கொடுத்தனர். டி.கே.ராஜேந்திரன் காரில் அமர்ந்ததும் அவரது காரை தேர் போல் அலங்கரித்து, வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து எழும்பூர் ராஜரத்தினம் திடலில் ராஜேந்திரனுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த விழாவில், டிஜிபிக்கள் சைலேந்திரபாபு, தமிழ்ச்செல்வன், விஜயகுமார், காந்திராஜன், பிரதீப் வி பிலிப், கரண் சின்கா ஆகியோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.

[youtube-feed feed=1]