கொல்கத்தா
திருணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
திருணாமுல் காக்கிரச் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில்,
”தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரிகளை மாற்றுவது போன்ற செயல்கள், தேர்தல் ஆணையத்தைக் கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளதாகவே தெரிகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது மக்களை எதிர்கொள்ள பா.ஜனதா அச்சப்படுவதாகவே தோன்றுகிறது.
எனவே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்”
என்று பதிவிட்டுள்ளார்.