திருச்சி:

திருச்சியில் இருந்து சென்னைக்கு புதிய விமான சேவை இன்று தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் திருச்சி வந்தடைந்தது.

அந்த விமானத்துக்கு  வாட்டர் சல்யூர் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானப்பயணிகளின் தேவையினைக் கருத்திற்கொண்டு உள்நாட்டு விமான சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமான சேவை இன்று தொடங்கப்பட்டது.  ஏர்இந்தியா நிறுவனத்தின் சார்பு நிறுவனமான அலையன்ஸ் ஏர்வேஸ் தினசரியாக இச்சேவை யினை வழங்குகிறது.

70 இருக்கைகள் உடைய இந்த சிறிய ரக விமானம், இன்று காலை  சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சிக்கு  காலை 8.40 மணிக்கு வந்தடைந்தது. அப்போது, அந்த விமானத்திற்கு  வாட்டர் சல்யூட் முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த புதிய விமான சேவையின்படி விமானம் தினசரி இயக்கப்படும் என்றும்,  சென்னையிலிருந்து காலை  7.05 மணிக்கு புறப்பட்டு 8.05 மணிக்கு திருச்சி வந்தடையும்.

அதேபோல், திருச்சியில் இருந்து மீண்டும் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு 10.05 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானசேவை மட்டுமன்றி துபாய், சவூதிஅரேபியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமானசேவை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.