சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் இருந்து பயணிகள் ரயில்களை இயக்கலாம் என்று இந்தியன் ரயில்வேக்கு தமிழக அரசு  கடந்த வாரம் கடிதம் எழுதிய நிலையில், அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரையும், செங்கல்பட்டு முதல் திருச்சி இடையேயும் ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,  தமிழகத்தில் ஜூன்  1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே  4 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து,  கொரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்த சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என இந்தியன் ரயில்வேக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கடந்த 3ந்தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை தவிர்த்து  மேலும்சில இடங்களுக்கு ரயில் சேவை வரும் 12ந்தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அரக்கோணம் to கோயம்புத்தூர் , திருச்சி to செங்கல்பட்டு வரை இன்டர்சிட்டி ரயில் இயக்க அனுமதி தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.

அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை  செல்லும் அந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது.

அதுபோல,  திருச்சிலிருந்து, செங்கல்பட்டு வரை வரும் 12 -ம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி கொடுத்துள்ளது. இந்த ரயில் அரியலூர் ,விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும்.  இந்த ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.