சென்னை
காவல்துறையினரை கேவலமாக விமர்சித்த சீமானுக்கு திருச்சி எஸ் பி நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டன. இந்த ஆர்ப்பாடட் பொதுக்கூட்டத்த்ல் சீமான் உரையாற்றிய போது தெரிவித்த சில கருத்துக்க்ள் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
சீமான்தனது உரையில்.
“தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னை அவமானப்படுத்த சிலர் நினைத்த நிலையில், தற்போது எனக்கு பெண் ஃபாலோயர்கள் அதிகரித்திருத்துள்ளனர். யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட போது, அவரது செல்போனை கைப்பற்றி, அதில் இருந்த ஆடியோக்களை திருச்சி எஸ்.பி. வருண்குமார் முறைகேடாக வெளியிட்டார்”
என்று பேசிய சீமான், காவல்துறையினரை தரக்குறைவான மற்றும் கேவலமான வார்த்தைகளால் வசை பாடினார்.
எனவே சீமானின் பேச்சு சர்ச்சையானது. சீமானுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக திருச்சி எஸ்.பி. வருண் குமார் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.