திருச்சி:
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு பல்டி அடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மத்திய அரசின் தமிழக விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிறை வளாகத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறியதை அடுத்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாஜக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 91 கைதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அது மட்டுமல்லாமல் சிறையில் சிறையில் அடிப்படை வசதிகள் செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து சிறைத்துறை டிஐஜி, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிபடுத்தினார்.