சென்னை:
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.