துரை

துரையில் நத்தம் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் உள்ள இடத்திலிருக்கும் மரங்களை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ. 70 கோடி செலவில் அமைக்க உத்தரவிட்டுள்ளது.    மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை இடத்தில் இந்நூலகத்தை அமைக்க ஏற்பாடு நடைபெறுகிறது.   பெரியாறு அணையைக் கட்டிய பென்னி கிவிக் வாழ்ந்த இடத்தில் நூலகம் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆயினும் தமிழக அரசால் நூலகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.   அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் அங்கே ஏற்கனவே உள்ள 50-க்கும் மேற்பட்ட பெரிய மரங்களை வேரோடு அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நட இயற்கை ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை அரசு ஏற்றுக கொண்டது.  எனவே தற்போது மரங்களை வேருடன் அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் நடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.  மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டு வேர்ப் பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது.