சென்னை,

திமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமின் மனு தாக்கல் செய்யாததால், அவரது காவல் ஜூன் 2ந்தேதி வரை  நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேச துரோக வழக்கு காரணமாக  கடந்த 2ம் தேதி கைசெய்யப்பட்ட வைகோவுக்கு சிறைத்தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

முதலில் 15நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது வைகோ ஜாமின் மனு தாக்கல் செய்யாததால் 27ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இன்றுடன் அவரது காவல் முடிவடைவதால் மீண்டும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி வைகோவின் காவலை ஜூன் 2ந்தேதிவ்ரை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டார்.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார்.

இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் காரணமாக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது சிறைகாலம் ஜுன் 2ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவரது சிறை தண்டனை காலம் 30 நாட்களாகிறது.