சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் காணிக்கை செலுத்த பே-டிஎம், ஜி-பே உள்ளிட்ட செயலிகள் மூலம் இ-காணிக்கை செலுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் ஏற்பாடு செய்துள்ளது.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பக்தர்கள் குவிவதையும் நவீன உத்திகளைப் பயன்படுத்தி காணிக்கை செலுத்தும் வகையிலும் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

சன்னிதானம், கோயில் பிரகாரம், நிலக்கல் என்று மலைப்பாதையில் 22 இடங்களில் க்யூ.ஆர். கோட் கொண்ட பதாகைகளை வைத்திருக்கும் கோயில் நிர்வாகம் இதற்காக தனலஷ்மி வங்கியுடன் கைகோர்த்திருக்கிறது.

இவை தவிர பிரத்யேக கூகுள் பே மொபைல் எண்ணையும் இதற்காக வழங்கியுள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் 265 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இது தவிர மேலும் 300 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது.