ழனி

ழனியில் மாடுகளை ஏற்றிச் சென்றது தொடர்பாக இருபிரிவினர் இடையில் ஏற்பட்ட மோதலால் பெரும் பதட்டம் நிலவுகிறது.

பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு விவசாயி தான் வாங்கிய 7 மாடுகளை (2 காளை மாடுகள், 5 பசுக்கள்) பழனி வழியாக லாரியில் எடுத்துச் சென்றுள்ளார்.   அப்போது செண்பகநல்லூரைச் சேர்ந்த மடாதிபதி ராமானுஜ ஜீயர் அதே வழியில் ஒரு கும்பாபிஷேகத்துக்காக சென்றிருக்கிறார்,   அந்த லாரியை வழிமறித்து அதனை ஜீயர் பழனி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றிருக்கிரார்.   அந்த மாடுகளை துன்புறுத்தி அழைத்துச் செல்வதாக ஜீயரால் போலிசில் புகார் அளிக்கப்பட்டது.   அதற்குள் அங்கு வந்த இந்து அமைப்பினர் அந்த மாடுகள் இறைச்சி விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக குற்றம் சாட்டினர்

இந்த விவரம் அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைக் கட்சியினர், எஸ்டிபிஐ, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆகியோரும் அங்கு குழுமினர்.  விவசாயத்துக்காக கொண்டு செல்லும் மாடுகளை வழி மறித்து பொய்ப் புகார் கொடுக்கப்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிப் போய், இரு தரப்பிலும் கல் வீசத் தொடங்கினர்.   ஜீயர் வந்த வாகனத்தின் மேலும் கல் வீசப்பட்டது.  கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.  காவி உடை அணிந்த இருவர் தடியடியில் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது  அது தவிர மேலும் இருவர் கல் வீச்சில் காயம் அடைந்ததாகவும்,  நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது,

இந்த கல்வீச்சில் அந்தப் பகுதியில் இருந்த ஒரு அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.  கடைகள் மூடப்பட்டன.  பெரும் பதட்டம் நிலவுகிறது.  போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்