அமராவதி,
தான் வருவதையொட்டி சாலைகளில் போக்குவரத்தை போக்குவரத்து போலீசார் நிறுத்தியதால், பொதுமக்களி டம் நேரடியாக மன்னிப்பு கேட்டுள்ளார் ஆந்திர முதல்வர். இதன் காரணமாக ஆந்திர மக்களிடையே அவர்மீதான மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநில முதல்வராக இருந்து வருபவர் சந்திரபாபு நாயுடு. மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வருகிறார். மேலும், அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வலியுறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்து உள்ளார்.
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான ஆந்திராவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி, தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு அமராவதி திரும்பினார்.
அவர் வர இருப்பதால், அவர் கார் செல்லும் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி வைத்தி ருந்தனர் போக்குவரத்து போலீசார். இதன் காரணமாக சலிப்படைந்த வாகன ஓட்டி ஒருவர், போலீசாருக்கு எதிராக குரல் எழுப்பினார்.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த சந்திரபாபு நாயுடு, இதுகுறித்து கேள்விபட்டார். உடனே அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கி, அந்த நபரிடம் மன்னிப்பு கோரினார்.
பொதுமக்கள் முன்னிலையிலேயே ஒரு மாநில முதல்வர் சாதாரண குடிமகனிடம் மன்னிப்பு கோரியது பொதுமக்களிடையே அவர்மீதான மதிப்பை மேலும் உயர்த்தி உள்ளது.