துரை

துரை நகரில் வைகை ஆற்ரில் நீர் வரத்து அதிகர்த்துள்ளதால் யானைக்கல் பகுதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

70 அடி உயரம் கொண்ட தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கப்படும் நீரானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்கும், குடிநீர் வாழ்வாதாரமாகும் விளங்கி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்த நிலையில், மழை நீரானது முல்லைப் பெரியாறு மூலம் ஆறுகளில் வழியாக வைகை அணையை வந்தடைந்தது. வைகை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1309 கன அடியாக இருந்து 4622 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

தமிழக அரசு வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்தது. விவசாயிகள் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்திற்காக நேற்று (நவ.10) முதல் வைகை அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து மதுரை யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டியுள்ள ஓபுளா படித்துறை – விரகனூர் வரை செல்லும் சர்வீஸ் சாலை, விரகனூர் – தத்தனேரி செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வைகை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை மேய்க்கவும் வேண்டாம் எனவும் அதிகளவில் தண்ணீர் செல்லும் தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகளில் செல்ஃபி எடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.