டில்லி,
டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மானேஜரை செருப்பால் அடித்து பரபரப்பு ஏற்படுத்திய சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட், தைரியமிருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று போலீசாருக்கு சவால் விடுத்துள்ளார்.
ஏர்இந்தியா விமானம் மூலம் பயணம் செய்த மகாராஷ்டிரா சிவசேனை கட்சியை சேர்ந்த எம்பி யான ரவீந்திர கெய்க்வாட், புனேவிலிருந்து டெல்லிக்கு காலையில் 7.35 மணிக்கு செல்லும் விமானத்தில் ஏறினார்.
இந்த விமானம் சாதாரண ரக இருக்கை வசதி கொண்டதாகும். இதில் சொகுசு இருக்கைகள் இல்லையே என்று சத்தம்போட்டு விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
மேலும்,. விமானம் டில்லியை வந்தடைந்த பிறகும் கெய்க்வாட் விமானத்தில் இருந்து இறங்க வில்லை. அவரை சமாதானம் செய்து இறங்க சொன்னார் விமான நிலைய மேலாளர் சிவகுமார் (60). அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, விமான நிலைய மோனேஜர் சிவகுமாரை கெய்க்வாட் தனது செருப்பால் அடித்து உதைத்தார்.
இதுகுறித்து விமான நிறுவனம் டில்லி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது.
இந்நிலையில், சிவசேனை எம்பியின கெய்க்வாட் கூறியதாவது,
‘யார் அந்த எம்.பி, பிரதமர் மோடியிடம் புகார் செய்வேன் என்று அதட்டலாக பேசவே, அவரை அடித்தேன், நான் அணிந்திருந்த செருப்பைக் கொண்டு 25 தடவை அடித்தேன் என்று ஒப்புக்கொண்டார்.
என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு மவுனமாக இருப்பதற்கு நான் பாஜக எம்.பி அல்ல. இந்த சம்பவம் பற்றி மன்னிப்பு கோரமாட்டேன். நானும் மக்களவைத் தலைவரிடம் புகார் செய்வேன்’ என்று கெய்க்வாட் தெரிவித்தார்.
மேலும், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள். நான் மன்னிப்பு தெரிவிக்க மாட்டேன், ஏர் இந்தியா மேலாளர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும்,
60 வயது நபருக்கு எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என தெரிய வேண்டும், என்னுடைய கட்சி எனக்கு துணையாக நிற்கும் என்றும் கூறி உள்ளார் ரவீந்திர கெய்க்வாட்.
இவ்விவகாரம் தொடர்பாக இதுவரையில் சிவசேனா எந்தஒரு கருத்தும் வெளியிடவில்லை
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை தாக்கல்செய்வதற்காக கமிட்டி ஒன்றையும் ஏர் இந்தியா அமைத்துள்ளது.