சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் மாற்றப்பட்டு உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ககன்தீப் சிங் பேடி தற்போது மீண்டும் 3வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும், வேளாண் துறை செயலாளராக இருந்த பேடி, சென்னை மாநகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதன்படி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் விபரம் பின்வருமாறு..
- மணிவாசன் (சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்) – நீர் வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளார்
- சந்திரமோகன் (பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர்) – சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர்
- மங்கத் ராம் சர்மா – (கால்நடை, பால் வளம், மீன் மற்றும் மீனவர் நலன் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
- செந்தில் குமார் – (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளர்) – சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர்
- சுப்ரியா சாஹூ – (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ) – சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
- ககன்தீப் சிங் பேடி – (மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ) – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் தலைமைச் செயலாளர்
- பிரதீப் யாதவ் – (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ) – உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
- செல்வராஜ் – ( தமிழ்நாடு சாலைகள் சிறப்பு திட்ட இயக்குநர் ) – நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர்
- ஜான் லூயிஸ் – ( தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழக நிர்வாக இயக்குநர் ) – சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநர்
- விஜயலட்சுமி – ( வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறை கூடுதல் செயலாளர் ) இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநர்
- வெங்கடாச்சலம் – (நில சீர்த்திருத்த துறை ஆணையர் ) – தொல்பொருள் ஆய்வு காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர்
- ஹரிஹரன் – ( தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர்) – நில சீர்திருத்த துறை ஆணையர்
- லில்லி – ( நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்பு செயலாளர் ) – போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளர்
- சந்தீப் சக்சேனா – ( நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்) – தமிழ்நாடு காகித ஆலை மேலாண்மை இயக்குநர்
- சாய் குமார் ( தமிழ்நாடு காகித ஆலை மேலாண்மை இயக்குநர் ) – தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குநர்
- மகேஸ்வரன் – (அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் ) – தமிழ்நாடு உப்புக் கழகம் மேலாண்மை இயக்குநர்
- வைத்தியநாதன் – ( தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்கநர் ) – அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநர்
- ஜவஹர் – ( நீர்பாசன மேலாண்மை மற்றும் நவீனமயமாக்கல் கூடுதல் தலைமைச் செயலாளர்) – சமூக சீர்த்திருத்தத் துறை செயலாளர்