புதுடெல்லி:

டிடிஹெச் மற்றும் கேபிள் கட்டணத்தை பிப்.1 முதல் மாற்றியமைத்து தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் ஜனவரி 28-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.


இதுவரை டிடிஹெச் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்கள் கொடுக்கும் சானல்களை மட்டுமே பார்க்க வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், பிப்.1 முதல் விரும்பும் சானல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தி பார்க்கலாம் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, டாடா ஸ்கை, சன் டைரக்ட், பாரத் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
டிராயின் இத்தகைய உத்தரவு பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பதாக இருந்தது. எனினும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.