அரக்கோணம்
பொறியியல் பணிகள் காரணமாக அரக்கோணம் செல்லும் ரெயில்கள் சில இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரக்கோணம் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரெயில் சேவைகளில் பல மாறுதல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இன்றும் (07/05/2018) சில ரெயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.
இன்று மதியம் சென்னை செண்டிரலில் இருந்து அரக்கோணத்துக்கு மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ரெயில், அரக்கோணத்தில் இருந்து சென்னை செண்டிரலுக்கு இரவு 11 மணிக்கு புறப்படும் ர்யில், அரக்கொணம் – செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு – அரக்கோணம் ரெயில்கள், ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
அத்துடன் அரக்கொணத்தில் இருந்து வேலூர், காட்பாடி, கடப்பா ஆகிய ஊர்களுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து வரும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ரெயில் காட்பாடியில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதே போல் மறு மார்க்கத்தில் வரும் ரெயில் காட்பாடியோடு நிறுத்தப்பட உள்ளது.