சென்னை: மகளிர் உரிமைத்தொகை பயனர்களுக்கு டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்ட பயிற்சி முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயனர்களுக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி ரேசன் கடை பணியாளர்களால் நேற்று (ஜுலை 21) முதல் தொடங்கி உள்ளது.
சென்னையிலும் மகளிர் உரிமை தொக்கான டோக்கன், விண்ணப்பம் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயிற்சி முகாமை சென்னை மாநராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், இதுவரை மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15% டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணியில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் இநத் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். ரேசன் கடைகளுக்கு ஏற்றவாறு முகாம்களின் எண்ணிக்கை மாறுபடும். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 703 ரேஷன் கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஏற்றவாறு முகாம்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.