சென்னை: ஜோலார்பேட்டை – தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், அந்த வழியாக இயக்கப்படும் 13 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,.
ரத்து செய்யப்பட்டுள்ள 6 ரயில்கள் விவரம்:
* அரக்கோணம் – சேலம் MEMU விரைவு ரயில் (காலை 05:15)
* சேலம் – அரக்கோணம் MEMU விரைவு ரயில் (பிற்பகல் 03:30)
* கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் (காலை 06:20)
* சென்னை சென்ட்ரல் – கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் (பிற்பகல் 02:30)
* ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (காலை 06:00)
*ஜோலார்பேட்டை – ஈரோடு பயணிகள் ரயில் (பிற்பகல் 02:45)
சென்னை சென்ட்ரல் – கோவைக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், இரண்டு பணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
கோவை – சென்னை சென்ட்ரலுக்கு நாளை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில், 2 மணி நேரம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு புறப்படும்.
இதுதவிர, 2 விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் இடையில் ஆங்காங்கே நின்று செல்லும்.
3 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]