சென்னை:
இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயிலில் பணம் கொள்ளை போன விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ரெயில் பெட்டியின் மேற்புரத்தில் துளையிட்டு சுமார் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொள்ளை பற்றிய துப்பு மற்றும் தடயங்களை தேடி காவல்துறையினர் ஒவ்வொரு ரெயில் நிலயமும் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரெயில் கொள்ளை சம்பவத்தில் 5 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதா சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கொள்ளை வழக்கில் முக்கிய தடயங்கள் சேலம் அருகே சிக்கி இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெயிலின் மேற்கூரையை துளையிட பயன்படுத்திய கருவிகள் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல புதிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 20 பேர் கொண்ட சிறப்புப்படை சேலத்தில் விசாரணை நடத்தி வருகிறது.