சென்னை: விழுப்புரம் ரயில் நிலையத்தில் யார்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், விழுப்புரம் மேல்மருவத்தூா் ரயில் இன்று பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தின் யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் – மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் சனிக்கிழமை (செப். 21) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட வணிக மேலாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருச்சி கோட்டத்தின் விழுப்புரம் ரயில் நிலைய யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் சனிக்கிழமை (செப்.21) மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் காரணமாக விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் ஒருநாள் மட்டும் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேல்மருவத்தூரிலிருந்து முற்பகல் 11.45 மணிக்குப் புறப்படும் மேல்மருவத்தூா்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண். 06725) விக்கிரவாண்டி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த ரயில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்படும். Advertisement2 எதிா்வழித்தடத்தில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் (வ.எண்.06726), விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்கு மேல்மருவத்தூருக்குப் புறப்பட்டுச் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.