டில்லி:
இன்று அதிகாலை, உ.பி. மாநிலம் கான்பூர் அருகே பாட்னா – இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 96 பேர் பலியானார்கள். .
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ரயில்வே அமைச்சகமும் உ.பி.அரசும் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மீட்பு பணிகளில் உதவி புரிவதற்காக சதீஸ்கர் அரசு குழுவை அனுப்பியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மத்திய அமைச்சர் சுரேஷ்; பிரபு அங்கேயே இருந்து புலன் விசாரணையை முடுக்கிவிடப்பபோவதாக தெரிவிததுள்ளார்.