டெல்லி: தங்களுடன் பேசுபவர் யார் என்பதை அறிய பெரும்பாலோர் ட்ரு காலர் என்ற செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்திய தகவல் தொலை தொடர்பு ஆணையமான டிராய் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயர் நமது தொலைபேசி திரையில் தெரிய டிராய் ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான பயனர்கள், Truecaller ஐ தங்கள் தொடர்புத் தேவைகளுக்காக நம்புகிறார்கள், இது அழைப்பவர் ID அல்லது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS ஆகியவற்றைத் தடுக்கும் என நம்பப்படுகிறது. இதைன்மூலம், பயனர்கள், தேவையற்றவர்களையும், தேவையற்ற கால்களையும் தவிர்க்க முடிகிறது. ஆனால், இந்த செயலி பாதுகாப்பற்றது மட்டுமின்றி பயனர்களன் தகவல்களுக்கும் பாதுகாப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், ட்ரு காலர் ஐடி-ஐ தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், டிராய், எதிர்முனையில் பேசுபவர் யார் என்பதைஅ றியும் வகையில் புதிய நடைமுறையை செயல்படுத்த முனைந்துள்ளது, . புதிய திட்டத்தின்படி, நம்மை எதிர்முனையில் அழைப்பவரின் பெயர், நமது தொலைபேசியில் இல்லாவிட்டாலும் அவரது பெயர் தெரியும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
தற்போது நமது தொலைபேசிக்கு அழைப்பவர் பெயரை ‘ட்ரூ காலர்’ போன்ற செயலிகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். ஆனால், டிராயின் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், ‘ட்ரூ காலர்’ போன்ற செயலிகளுக்கு தேவை இருக்காது. நாம் அளித்து உள்ள கேஒய்சி தகவல்களின் அடிப்படையில் தொலைபேசி அழைப்புகளின் போது பெயருடன் திரையில் காண முடியும். இதை அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.