பட்டத்தின் நூலில் தொங்கியபடி உயிரிழந்த பச்சைக்கிளியின் புகைப்படம் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது. இதயத்தை நொருக்கும் அந்த புகைப்படத்தை வெளியிட்ட நபர் மாஞ்சா கயிற்றை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

hanging

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மகர் ஷங்கராந்தி பண்டிகை கடந்தம் நமது நாட்டில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது மக்கள் இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பட்டம் விட்டு வெளிப்படுத்துவர். அந்த வகையில் நாட்டில் பல மாநிலங்களிலும் பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்பட்டது.

மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஆகாயத்தை நோக்கி விடப்படும் பட்டம் நூற்றுக்க்ணக்கான பறவைகளின் வாழ்க்கையையும், இனத்தையும் அழிக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை. சமீபத்தில் பிதிதாபக் என்ற டிவிட்டர் முகவரில் “ மாஞ்சா கயிற்றில் தொங்கியப்படி பச்சிக்கிளி ஒன்று உயிரிழந்த புகைப்படம்” பகிரப்பட்டுள்ளது. இதயத்தை நொருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பறவைகளும் விலங்குகளையும் பாதுகாக்க வேண்டுமென கூறி வருகின்றனர்.

பிதிதாபக் டிவிட்டர் பதிவில் மாஞ்சா கயிற்றில் தொங்கியப்படி பச்சிக்கிளி ஒன்று உயிரிழந்த புகைப்படத்துடன், ” இதற்காக நமது தலைகள் தொங்க வேண்டும். மனதை கடினமாக்கும் இந்த புகைப்படத்தை பவிக் தாகேர் ‘கைபோ சே’ என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். பட்டம் விடும் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழக்கின்றன. சீனா நூல் அல்லது மாஞ்சா கயிறு பயன்பத்துவதை தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பறவைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் மாஞ்சா கயிற்றை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமென பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இது டிவிட்டரில் வைரலை ஏற்படுத்தி உள்ளது.

மாஞ்சா கயிற்றில் பச்சைக்கிளி தொங்கும் புகைப்படம் மனதை உலுக்கினாலும், நமது சந்தோஷத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் விலங்குகளை அழிக்கிறோம் என்பதே நூறு சதவிகிதம் உண்மை.