திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் கூண்டோடு பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
திருவண்ணாமலையில் மகாதீபம் திருவிழா தொடங்கி உள்ள நிலையில், அண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல், திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சூறையாடிச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மலை காரணமாக, . திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மேலும், திருவண்ணாமலை தீப மலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதுவரை இப்படியொரு நிலச்சரிவு ஏற்படாத நிலையில், மலையின் அடிவார பகுதிகளில் 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்து உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் தொடர்ந்து கனமழை பெய்ததால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும் மீட்பு பணிகளில் ஈடுபடு பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் தொடர் மழை காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இன்று தொடர்ந்து மீட்பு பணி தடைபெற்றது. இன்று காலை மீண்டும் மீட்பு பணி தொடங்கி நடைபெற்றது. மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில், உயிரோடு நிலச்சரிவில் புதைந்தவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த மண் சரிவில், குழந்தைகள் 7 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் ராஜ்குமார் (32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் உள்ளே சிக்கினர். கவுதம், இனியா ஆகியோர் ராஜ்குமார், மீனா தம்பதியின் குழந்தைகள் என்பது தெரிய வந்தது.