மதுரை:  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள பணிக்கு செல்லும் பெண்கள் தங்கியிருக்கும்  மகளிர் விடுதியில்  எற்பட்ட தீ விபத்தல் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இது பெரம் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு புகையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு,  பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பெண்கள்  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம்  தனியாருக்கு சொந்தமான மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பல மாவட்ட பெண்கள் தங்கியிருந்து அருகே உள்ள இடங்களுக்கு பணிக்கு சென்று வருகின்றனர். இந்த விடுதியில்,  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த விடுதியில்  உள்ள குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்)  இன்று அதிகாலை மின்சாரம் காரணமாக தீ விபத்து எற்பட்டதாக கூறப்படுகிறது. அதை அடுத்து பிரிட்ஜ் வெடித்து சிதறியதால் பல இடங்களில் தீ பற்றியதுடன் கரும்புகை குபுகுபுவெ ளயானது. இதையானல், அங்கு தங்கியிருந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு தெருவுக்கு ஓடினார். இதுகுறித்து உடனே தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் கரும்புகை காரணமாக சிலர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களை  சக பெண்கள் மீட்டதாக கூறப்படகிறது. இதற்கிடையில் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அதிரடியாக தீயை கட்டுப்படு  மீட்பு பணியில் இறங்கினார்.

பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில் இருந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரையும் பலத்த காயங்களுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், புகையால் பாதிக்கப்பட்டு மூச்சுச்திணறல் ஏற்பட்டவர்களை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றனர். பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.