சென்னை:
ஊரடங்கை மதிக்காமல் சாலைகளில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் ‘கொரோனா’வாக மாறி அறிவுரை கூறும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பலர் அதை மதிக்காமல் வாகனங்களில் சுற்றி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும், அரசின் உத்தரவுகளையும், எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல் செலபவர்களும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதுபோன்ற நபர்களிடம் சற்று கடுமை காட்டத் தொடங்கிய காவலர்களையும் அரசு அடக்கி வைத்துள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர், கொரோனா உருவம் தரித்த முகக்கவசம் அணிந்துகொண்டு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம், ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனாவின் வீரியம் குறித்து தெரிவித்து, வெளியே வராதீர்கள், வீடுகளுக்கு செல்லுங்கள் அறிவுரை கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
விழித்திரு – விலகி இரு – வீட்டிலேயே இரு… கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில் இருந்து நம்மை பாதுகாப்போம்…
[youtube-feed feed=1]