திருச்சி மற்றும் விழுப்புரம் இடையே அரசூர் அருகே மலட்டாறு மற்றும் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் தண்ணீர் ஆறாக ஓடிய போதும் சில வாகனங்கள் சாலையின் ஒருபுறத்தில் மட்டும் அனுமதிக்கப்படுவதை அடுத்து அதில் ஊர்ந்து செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல் காரணமாக பல வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
தவிர, திண்டிவனம் – செஞ்சி சாலை மற்றும் செஞ்சி விழுப்புரம் சாலையிலும் துணை ஆறுகளான பம்பை மற்றும் வராகி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் – கடலூர் மார்க்கத்திலும் சாலையில் வெள்ளநீர் ஓடுவதை அடுத்து சென்னையில் இருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
விழுப்புரம் – திருச்சி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களை தவிர்க்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.