திருச்சி: பிரதமர் மோடியின் திரசசி வருகையை ஒட்டி திருச்சியில் பேருந்துகள், இலகுரக மற்றும் கனரக வாகனகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெறும் அரசு மற்றும் கட்சிகளில் பங்கேற்கவுள்ளார். இந்த பயணத்தின் அங்கமாக திருச்சி அருகே பஞ்சப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5,650 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் இருக்கிறார்.
அத்துடன் திருச்சியில் பிரதமர் மோடி 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார். பிரதமரின் வருகை ஒட்டி திருச்சி மாநகரில் மார்ச் 11 புதன்கிழமை அன்று போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மதுரை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பஞ்சப்பூர் ஜங்சன் வரை வந்து அங்கிருந்து வலது பக்க சாலையில் திரும்பி எதிர் திசையில் பேருந்து நிலைத்திற்கு பின் புறமாக வரவேண்டும்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மார்க்கமாக செல்லும் நகர பேருந்துகள் வழக்கமான பாதையில் வெளியே செல்ல வேண்டும்.
சென்னை, பெரம்பலூர், சேலம், மார்க்கத்திலிருந்து வரும் நகர் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கீழே இறங்கி சர்வீஸ் சாலை வழியாக இடது புறம் திரும்பி கே. கே. நகர், LIC காலனி, உழவர்சந்தை, சாத்தனூர் குளம் வழியாக சென்று வலதுபுறம் திரும்பி செட்டியப்பட்டி Water tank வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
கரூர், கோயம்புத்தூர், சேலம், சென்னை செல்லும் பேருந்துகள் பின்புறமாக வெளியே வந்து செட்டியப்பட்டி, சாத்தனூர்குளம், வழியாக ஓலையூர் ஜங்கன் வழியாக கே.கே. நகர் வழியாக ஒயர்லஸ் ரோட்டை அடைந்து TVS Tolget வழியாக வெளியே செல்ல வேண்டும்.
கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் உள்ளூர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் முசிறி, திருச்சி மாநகருக்குள் வராமல் BHEL ரவுண்டானா விலிருந்து திருப்பிவிடப்பட வேண்டும்.
சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து சேலம், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து, நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.
சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து குன்னம், அரியலூர், திருவையாறு வழியாக சென்று வரவேண்டும்.
மதுரை மார்க்கத்திலிருந்து சென்னை, பெரம்பலூர் செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து திருப்பிவிடப்பட்டு மணப்பாறை, குளித்தலை, முசிறி, நெ.1 டோல்கேட் வழியாக பெரம்பலூர் செல்லவேண்டும்.
சேலம் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, பெரம்பலூர், குன்னம், அரியலூர் வழியாக சென்று வரவேண்டும்.
மதுரை மார்க்கத்திலிருந்து சென்னை, பெரம்பலூர் செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து திருப்பிவிடப்பட்டு மணப்பாறை, குளித்தலை, முசிறி, நெ.1 டோல்கேட் வழியாக பெரம்பலூர் செல்லவேண்டும்.
திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து சென்னை, பெரம்பலூர், தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையில் திருப்பிவிடப்பட்டு குளித்தலை, முசிறி, நெ.1 டோல்கேட், பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்லவேண்டும்.
தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து சேலம், கரூர், திண்டுக்கல், செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர், நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்லவேண்டும்.
தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.
புதுக்கோட்டையிலிருந்து சென்னை பெரம்பலூர் செல்லும் கனரக வாகனங்கள் கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து கரூர், திண்டுக்கல், சேலம் செல்லும் கனரக வாகனங்கள் விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, முசிறி வழியாக செல்லவேண்டும்.
அ
ரியலூரிலிருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர், பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும்.
மேற்கண்ட மாற்றங்களுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தேவையான ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]