சென்னை
சோதனை முறையில் சென்னை ராஜிவ் காந்தி சாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்து போக்குவரத்து காவல் பிரிவு நடவடிக்கை நேற்று முதல் இந்த புதிய முறை சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளது
திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் சி.பி.டி சந்திப்பை (மத்திய கைலாஷ்) நோக்கி வலதுபுறம் திரும்பக்கூடாது; அதற்கு பதிலாக, இடதுபுறம் திரும்பி, அசெண்டஸ் சந்திப்பை நோக்கிச் சென்று NIFT அருகே ‘யூ டர்ன்’ எடுத்து சி.பி.டி சந்திப்பை அடையலாம்.
டைடல் பார்க் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் தரமணி நோக்கி வலதுபுறம் திரும்பக்கூடாது; அதற்குப் பதிலாக, நேராகச் சென்று யூ டர்ன்’ எடுத்து தரமணி செல்லலாம்.
வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் SRP Tools சந்திப்பில் வலதுபுறமாக திரும்பக்கூடாது; அதற்கு பதிலாக, இடதுபுறமாக திரும்பி, முன்சென்று, யூ டர்ன்’ எடுத்து அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு மற்றும் துரைப்பாக்கம் சந்திப்பை அடையலாம்.
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்
”திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் டைடல் பார்க் ஜங்சனில் மத்திய கைலாஷ் சிபிடி சந்திப்பை நோக்கி இடதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர்கள் வலதுபுறம் திரும்பி அசென்டாஸ் சந்திப்பு வரை சென்று (nift அருகில்) யூடர்ன் எடுத்து அதன்பிறகு 100 மீட்டர் சிபிடி சந்திப்பை அடையலாம்.
டைடல் பார்க் ஜங்சனில் இருந்து வாகனங்கள் அசன்டாஸ் ஜங்சனில் தரமணி நோக்கி இடதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுகிறது. அவர்களும் யூடர்ன் எடுத்து தரமணியை அடைய வேண்டும்.
வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பில் (ஹாலிடே இன் ஓட்டல்எதிரே) அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு மற்றும் துரைப்பாக்கத்திற்குச் செல்ல இடதுபுறம் திரும்ப தடைவிதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாகவும் அவர்களும் வலதுபுறம் சென்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள யூடர்ன் வழியாக போகலாம்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.