சண்டிகர்
விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேளாண் விளைபொருட்கள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்- அரியானா எல்லையில் உள்ள கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70) கடந்த மாதம் 26ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது உடல்நிலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மிகவும் மோசமாகி வருகிறது. உச்சநீதிமன்றம் ஜக்ஜித் சிங்கை 31 ஆம் தேதிக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் இன்று பல்வேறு பகுதிகளில் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து குறிப்பாக, சண்டிகர் – பட்டியாலா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.