கெய்ரோ

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து  நெருக்கடியை நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கப்பல் தரை தட்டுவது சாதாரண விவகாரம் எனக் கூறப்படும் நிலையில் கடந்த 4 நாட்களாக ஒரு கப்பல் தடை தட்டியதை பற்றி உலகம் முழுவதும் கவலை சூழ்ந்துள்ளது.  அது சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டியுள்ள மிக பெரியர் ராட்சத சரக்கு கப்பலைப் பற்றிய கவலை ஆகும்.

ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்கு சூயஸ் கால்வாய் வழியாக ஆண்டொன்றுக்கு 15 முதல் 19 ஆயிரம் கப்பல்கள் பயணம் செய்கின்றன.   அவ்வகையில் கடந்த 23 ஆம் தேதி பயணம் செய்த எவர் கிரீன் என்னும் சரக்கு கப்பல் பயணம் செய்கையில் வேகமாக வீசிய காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது.

இந்த கப்பல் இரு கரைகளின் இடையே தரை தட்டி நின்றது.  இதனால் இரு புறமும் உள்ள கப்பல்கள் செல்ல முடியாமல் கடலில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.  சுமார் 5 நாட்களுக்குப் பிறகு பல உலக நாடுகளின் வர்த்தகம் ஸ்தம்பிக்கலாம் என அஞ்சப்படும் இந்த நிகழ்வில் ஓரளவு தெளிவு ஏற்பட தொடங்கி ள்ளது.

இந்த கப்பலின் ஒரு பகுதி மீட்கப்பட்டு மிதக்கத் தொடங்கியுள்ளதால் விரைவில் கப்பல் முழுமையாக மீட்கப்படும் என நம்பிக்கை பிறந்துள்ளது.  இந்த கப்பல் மீட்கப்பட்டு முழுமையாகத் திருப்பிய பிறகு போக்குவரத்து நெருக்கடியை இரு புறமும் நின்று போன மற்ற கப்பல்களை நகர்த்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

தற்போது இரு புறமும் சுமார் 280 கப்பல்கள் நின்று கொண்டு இருக்கின்றன. முதல் கட்டமாக இதில் 43 கப்பல்களைச் செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.  அடுத்ததாக மேலும் 133 கப்பல்களை நகர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.   மீதமுள்ளவையும் விரைவில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.