உலக பூமி தினம்- 60 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு

Must read

புதுடெல்லி:
“Earth Hour” என்னும் பூமி நேரம், மார்ச் 27ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணிவரை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து வைத்து ஆதரவு அளித்தனர்.

நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், பருவநிலை மாற்றம் குறித்த அக்கறையைப் பரப்பவும், இயற்கையை நேசிக்கவும் “Earth Hour” அனுசரிக்கப்படுகிறது.

உலக வனவிலங்கு நிதியம் (World Wildlife Fund – WWF) முதன்முதலில் 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த முயற்சியைத் தொடங்கியது.

அப்போது சுமார் 2.2 மில்லியன் பேரிடம், விளக்குகளை அணைத்து வைத்து பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு WWF கேட்டுக்கொண்டது.

அதன் பிறகு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் “Earth Hour” கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐஃபல் (Eiffel) கோபுரம், சிட்னி ஓப்ரா ஹவுஸ் (Sydney Opera House), பக்கிங்ஹாம் அரண்மனை என பல முக்கிய இடங்களும் “Earth Hour” நேரத்தில், விளக்குகளை அணைத்து ஆதரவு தெரிவித்துள்ளன.

More articles

Latest article