சென்னை
பேருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று நள்ளிரவுக்கு மேல் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது,
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளை போராட்டம் தொடங்கும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் திருச்சியில் பேருந்துகள் இயக்கம் தற்போதே குறையத் தொடங்கியுள்ளது.
சி.ஐ.டி.யு, தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன்,
”பேருந்துகள் இயக்கம் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று நள்ளிரவுக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது.
இன்று நள்ளிரவு 11.59 மணி வரை தொலைதூரம் செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்படும்.
மிக நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்மந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும்”
என்று அறிவித்துள்ளார்.