டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம் தொடர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி ஏற்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் மோடி பதில் மோடி பதில் தெரிவித்துள்ளார்.

முங்னனதாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் 25% வரி ஆகஸ்ட் 27, 2025 முதல் அமலுக்கு வந்தது, இதன் மூலம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் இந்தியா மீது வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதித்தது.
இருந்தாலும் பிரதமர் மோடி, விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்கள் ஆகியோரின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது என்று வலியுறுத்தினார், “எங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் நாங்கள் அதைத் தாங்கிக் கொள்வோம்” என்று எச்சரித்தார். மேலும் இந்தியர்கள் சுதேசி பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தும் படி அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். மேலும் வணிக நிறுவனங்களும் அமெரிக்க பொருட்கள் விற்பனை தவிர்ப்பதாக அறிவித்தன. இதனால், அமெரிக்க நிறுவனங்களும் பாதிப்புகளை சந்தித்தன. இதற்கிடையில், அங்குள்ள உச்சநீதிமன்றம், டிரம்பின் வரிவிதிப்பை கடுமையாக சாடியது. அதுபோல நாடுகளும் டிரம்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தன.
இதற்கிடையில் பிரதமர் மோடி, சீனாவில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் கலந்துகொண்டதுடன், ரஷியா, சீனா உடன் பொருளாதாரம் குறித்து விவாதித்தார். ரஷ்யா ஏற்கனவே இந்தியாவுக்கு முழுமையாக உதவி செய்து வரும் நிலையில், சீனாவும் இந்தியாவின் நலனில் அக்கறை கொள்வதாக அறிவித்தது. இதன் காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் இழப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. மேலும் அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அவரது அமைச்சரவை சகாக்களே கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக டிரம்ப் தனது எக்ஸ் வளைதளத்தில் பதிவு போட்டிருந்தார். அதில், நமது (இந்தியா, அமெரிக்கா ) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் பேச நான் காத்திருக்கிறேன்.
நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையில் ஒரு வெற்றிகரமான முடிவு கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பரிதமர் மோடி பதில் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோரிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளதுடன், இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள். இந்தியா – அமெரிக்க உறவின் வரம்பற்ற திறனைத் வளர்ப்பதற்கு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழி வகுக்கும் என்று நம்புகிறேன். இந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.
அதிபர் டிரம்ப்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது மட்டுமின்றி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரையில் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் டிரம்ப் கூறினார். இதனையயடுத்து, ரஷியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தைகள் சக்சஸ் ஆனால், அமெரிக்காவின் பொருளாதார நிலை பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிவிடும். இந்த நிலையில்தான், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.