டெல்லி:  பஞ்சாப் விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட வரும் நிலையில்,  இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று,  வரும் 18ந்தேதி அன்று பஞ்சாப் மாநிலம்  முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், பிற்பகல், பஞ்சாபில்  இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் தடுப்போம் என பஞ்சாப் விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் , பஞ்சாபில் டிசம்பர் 16, 18 ஆகிய தேதிகளில் டிராக்டர் அணிவகுப்பு மற்றும் ‘ரயில் ரோகோ’ நடத்தப்படும் என்று கூறினார்.

இன்று (டிசம்பர் 16)  பஞ்சாப்க்கு வெளியே ஒரு டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும் என்றும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 18 ஆம் தேதி பஞ்சாபில் ‘ரயில் ரோகோ’ நடத்தப்படும் என்றும் கூறியதுடன்,   101 விவசாயிகளின் ‘ஜாத்ஹா’ சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணமாக ஷம்பு எல்லையில் காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளது என்றவர், ஷம்பு எல்லையில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியதால் 17 விவசாயிகள் காயமடைந்ததாக  கூறினார். மேலும், பல விவசாயிகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

 

மத்திய அரசை கண்டித்து பஞ்சாப் உள்பட சில மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.  ஏற்கனவே மத்தியஅரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய நிலையில், அவற்றை மத்தியஅரசு வாபஸ் பெற்றது. இருந்தாலும், வேளாண் விலை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்பட சில மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இவர்கள் நாடாளுமன்றம் நடைபெறும் காலங்களில் டெல்லிக்கு பேரணியைக செல்வதையும், நாடாளுமன்றத்தையும் முடக்கவும் முயற்சித்து வருகின்றனர். இதனால், இவர்களை மத்திய, மாநில அரசுகள்,  டெல்லிக்குள் நுழைய விடாமமல் பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு எல்லையில் தடுத்து வைத்துள்ளனர். இதனால் பல மாதங்களாக விவசாயிகள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.  இதற்கிடையில், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், டிச.6ம் தேதி மீண்டும்,  டெல்லியை நோக்கி கால்நடையாக பேரணியை தொடங்கி உள்ளனர். அவர்கள் தடுத்த நிறுத்த டெல்லி அரசு நடவடிக்கைகள்மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில்,  நவம்பர் 26ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 70வயதான ஜக்ஜித் சிங் தலேவா என்ற விவசாய சங்கத் தலைவர் தனது போராட்டத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் ஒன்றிய அரசுக்கு எதிரான விவசாயிகளின் மனநிலை இறுகி வருகிறது. தங்கள் கோரிக்கைகள் குறித்து உடனே பேச்சுவார்த்தை தொடங்குமாறு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உச்சநீதிமன்றமும் மத்திய மாநிலஅரசை அறிவுறுத்தி உள்ளதுடன், பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று, தலேவா தலைவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது

இநத் நிலையில், டெல்லிக்குள் விட மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, நாளை மறுநாள் (டிசம்பர் 18ந்தேதி) பஞ்சாபில்  மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது என பஞ்சாப் நில விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.  மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பஞ்சாபில் அனைத்து ரயில்களும் தடுத்து நிறுத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். ரயில் மறியல் போராட்டத்தில் 13,000 கிராமங்கள் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் பலநூறு டிராக்டர்களில்  கலந்துகொண்டு, வன்முறையை தூண்டியதுடன்,   டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்தும், அங்குள்ள கொடி கம்பத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றிய சம்பவமும், அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால், இதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற நிலையில், மத்தியஅரசு விவசாயிகளின் போராட்டத்தை டெல்லி எல்லையிஅலயே தடுத்துநிறுத்தி உள்ளது.