இங்கிலாந்தின் மான்செஸ்டரிலிருந்து கார்டிஃப் நோக்கிச் சென்ற ரயில், ஆளில்லா லெவல் கிராசிங்கில் டிராக்டர் டிரெய்லருடன் மோதியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹியர்ஃபோர்ட்ஷையரின் லியோமின்ஸ்டர் அருகே டிரான்ஸ்போர்ட் ஃபார் வேல்ஸ் (TfW) நிறுவனத்தின் ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

5 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் மொத்தம் 66 பேர் பயணம் செய்த நிலையில் இரண்டு பயணிகள் காயமடைந்ததாக பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் டிராக்டரை ஒட்டி வந்தவருக்கும் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று காலை 10.40 மணிக்கு லியோமின்ஸ்டருக்கு வடக்கே உள்ள லெவல் கிராசிங்கில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் நல்வாய்ப்பாக ரயில் தடம்புரளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், நாள் முழுவதும் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாக புரோமியார்டைச் சேர்ந்த 32 வயது நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.